231 கிலோ கிரேம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பலப்பிட்டிய கடற்பகுதியில் வைத்து இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி இரண்டாயிரத்து 778 மில்லியன் ரூபாவென பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்தார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.