Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மழையுடனான காலநிலை இன்றிரவு முதல் அதிகரிக்கலாம்

shukrymjm
By shukrymjm டிசம்பர் 2, 2018 13:01

மழையுடனான காலநிலை இன்றிரவு முதல் அதிகரிக்கலாம்

நாட்டில் காணப்படும் மழையுடனான கால நிலை இன்று இரவிலிருந்து ஓரளவுக்கு அதிகரிக்கககூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில்  மழை பெய்யலாம் என்றும் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய,, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்,

இதேவேளை பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் ,காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளிலும் காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக்கடற்பிரதேசங்கள் ஓரளவு கொந்தளிப்பாகவும்காணப்படும் என்றும் திணைக்களம் மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

shukrymjm
By shukrymjm டிசம்பர் 2, 2018 13:01
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க