Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கா.பொ.த. சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பம்

shukrymjm
By shukrymjm டிசம்பர் 2, 2018 12:53

கா.பொ.த. சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பம்

க.பொ.த சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ளது.

பரீட்சை காலை 8.30 இற்கு ஆரம்பமாகும். பரீட்சார்த்திகள் காலை எட்டு மணியளில் பரீட்சை மத்திய நிலையங்களில் சமூகம் அளிக்க வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளனார். அனுமதி அட்டையில் பரீட்சைக்கான நேர அட்டவனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கவனத்தில் கொண்டு பரீட்சைக்கு சமூகமளிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

நாடு முழுவதிலும் நான்காயிரத்து 561 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ள பரீட்சையில் ஆறு இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

இரத்மலானையிலுள்ள விசேட தேவைகளை கொண்ட கல்லூரியிலும் தங்காலை, மாத்தறை, சிலாபம் மற்றும் கொழும்பு மெகசீன் சிறைச்சாலையிலும் பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேராதனை போதனா வைத்தியசாலையிலும் மஹரகம அபெக்ஸ்ஸா வைத்தியசாலையிலும் இரண்டு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

இம்முறை இந்த பரீட்சை மத்திய நிலையங்களுக்கும் மேலதிக மண்டப கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டு;ள்ளனர். பரீட்சையின் போது இடம்பெறும் முறைகேடுகளை தடுப்பதே இதன் நோக்கமாகும்.

பரீட்சை அனுமதி அட்டை, தேசிய அடையாள அட்டை, பென்சில், பேனா தவிர்ந்த வேறு எந்த உபகரணங்களையும் பரீட்சை மத்திய நிலையங்களுக்கு எடுத்து வர அனுமதியில்லை. கபொத சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 12ம் திகதி நிறைவடையவுள்ளது.

shukrymjm
By shukrymjm டிசம்பர் 2, 2018 12:53
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க