Life+News The Official News Portal of Independent Television Network Ltd

19 வயதுக்குட்பட்ட 1.2 இலட்சம் பேருக்கு எச்.ஐ.வி.

shukrymjm
By shukrymjm டிசம்பர் 1, 2018 10:47

19 வயதுக்குட்பட்ட 1.2 இலட்சம் பேருக்கு  எச்.ஐ.வி.

இந்தியாவில், 19 வயதுக்குட்பட்ட 1.2 லட்சம் பேர் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி. பரவுவதைத் தடுக்கப் போதுமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், வரும் 2030-ஆம் ஆண்டுவாக்கில், சராசரியாக நாள்தோறும் 80 பேர் உயிரிழப்பர் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பு குழந்தைகள், எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் உலகம் 2030′ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
குழந்தைகள் வளர் இளம்பருவத்தினர், கர்ப்பிணிப் பெண்கள் தாய்மார்கள் ஆகியோரிடையே எச்.ஐ.வி. பரவுவதைத் தடுப்பதில் தெற்காசிய நாடுகள் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளன. இந்தியாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 19 வயதுக்குட்பட்ட ஏறத்தாழ 1.2 லட்சம் பேர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்காசிய நாடுகளில் இது அதிகபட்சமாகும்.
இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்படுவது கடந்த 2010-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, 43 சதவீதம் குறைந்துள்ளது. எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 14 வயதுக்குட்பட்டவர்களுள் 73 சதவீதம் பேர் அதற்கான தகுந்த சிகிச்சைகளைப் பெற்று வருகின்றனர். இது கடந்த 2010-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 50 சதவீதம் அதிகமாகும்.
எய்ட்ஸ் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. இருந்தபோதிலும், அது குறைந்துவரும் வீதம் மிக மெதுவாக நிகழ்ந்து வருகிறது என்று அந்த அறிக்கையில் மெலம் தெரிவிக்கப்பட்டள்ளது.

shukrymjm
By shukrymjm டிசம்பர் 1, 2018 10:47
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க