Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தைத்த ஆடைகளை தயாரிக்கும் 3 சுதந்திர வர்த்தக வலயங்களை நிறுவ நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 26, 2018 13:28

தைத்த ஆடைகளை தயாரிக்கும் 3 சுதந்திர வர்த்தக வலயங்களை நிறுவ நடவடிக்கை

தைத்த ஆடைகளை தயாரிக்கும் 3 சுதந்திர வர்த்தக வலயங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆடைகளை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். தாய்லாந்து மற்றும் பேங்கொக்கில் இருந்து இலங்கைக்கு தைத்த ஆடைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் தைத்த ஆடைகளை தயாரிக்கும் தொழிற்சாலைகளில் 3 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பணியாற்றுகின்றனர். தைத்த ஆடைகள் தொடர்பில் கொடுக்கல் வாங்கல்கள் அதிகம் இடம்பெறும் நகரமாக கண்டி நகரம் காணப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முழு நாட்டையும் ஆடைக்கைத்தொழில் வலயமாக மாற்றும் சட்டரீதியான நிதி வளங்கள் உள்ளடங்கிய சட்டமூலமொன்று முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதி , கண்டி பாமுனுவ மற்றும் மீகொட பாதுக்க பிரதேசங்களில் சுதந்திர வர்த்தக வலயங்களை ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 26, 2018 13:28
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

  • Exchange Rates
  • Indicative Rates
CountryBuyingSelling
Dollar177.33181.30
USA
Pound222.73230.08
UK
Euro200.33207.48
EU
Yen1.551.61
Japan
Yuan25.4826.71
China
Dollar126.86132.29
Australia
CountryCurrencyRate
Dinar476.09
Dinar590.25
Riyal466.09
Riyal49.28
Riyal47.83
Dirham48.85