Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அடுத்த வருடம் முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 22, 2018 15:34

அடுத்த வருடம் முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி

அடுத்த வருடம் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கையொன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படும் வரை அரச சேவைகளின் செலவுகளை ஈடுசெய்வதற்கு தேவையான நிதியை இதனூடாக பெற்றுக்கொள்ள முடியுமென அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதற்கான யோசனையை நிதியமைச்சர் என்ற வகையில் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். குறித்த அறிக்கையை தயாரிப்பதற்கு சட்டரீதியான ஏற்பாடுகள் குறித்து ஆராய அது சட்ட ஆய்வு குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அதற்கமைய அடுத்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரச சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்கு குறித்த இடைக்கால அறிக்கையினூடாக வாய்ப்பு கிட்டியுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 22, 2018 15:34
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க