இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியில் தினேஷ் சந்திமால் விளையாட மாட்டார் என தெரிய வருகிறது.
இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியின் போது சந்திமால் உபாதைக்குள்ளானார்.இந்நிலையில் அவர் இன்னும் சரிவர உடல் தகுதி பெறாததன் காரணமாகவே 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனுஷ்க குணதிலக அணியில் இடம்பிடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளுக்குமிடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.