Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் ரயில் தொகுதியின் முதலாவது தொகுதி அடுத்தவாரம் வருகிறது

shukrymjm
By shukrymjm நவம்பர் 21, 2018 14:45

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் ரயில் தொகுதியின் முதலாவது தொகுதி அடுத்தவாரம் வருகிறது

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் ரயில் தொகுதியின் முதலாவது தொகுதி அடுத்தவாரம் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

அவற்றில் இரண்டு ரயில் எஞ்சின்களும், ரயில்பெட்டிகளும் உள்ளடங்குகின்றன. இவ்வாறு கொண்டுவரப்படும் ரயில் தொகுதியின் முதலாவது பரீட்சார்த்த பயணம் கொழும்புக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையில்  ஈடுபடுத்தப்படவுள்ளது. அதன் தரத்தின் அடிப்படையில், எஞ்சிய ரயில் தொகுதிகளும் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ரயில்கட்டணங்கள் அதிகரித்த நிலையில், ரயில்வே திணைக்களத்தின் வருமானமும் அதிகரித்திருப்பதாக ரயில்வே பொதுமுகாமையாளர் குறிப்பிட்டார். ரயில் கட்டணங்களுக்கு அமைய புதிய பயணச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

shukrymjm
By shukrymjm நவம்பர் 21, 2018 14:45
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க