Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அவதானம்-மத்திய வங்கி

shukrymjm
By shukrymjm நவம்பர் 15, 2018 08:18

நிதி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அவதானம்-மத்திய வங்கி

மோசடியான நிதிக்கொடுக்கல் வாங்கல் மற்றும் மின்னஞ்சல் நிதிக்கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களை கேட்டுள்ளது. நிதி அன்பளிப்பு தொடர்பாக மத்திய வங்கிக்கு எந்தவித தொடர்பும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடியான நிதிக்கொடுக்கல் வாங்கல் மற்றும் மின்னஞ்சல் செய்திகள் குறித்து பொதுமக்கள் மத்திய வங்கியில் முறைப்பாடு செய்துள்ளனர். பணத்தை பெற்றுக்கொள்வதற்காக மக்களை தூண்ட நம்பகரமான நிறுவனங்களாக செயற்பட்டு இம்மோசடிக்காரர்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அத்துடன் மத்திய வங்கியின் இலச்சினை மத்திய வங்கி தலைமையக கட்டிடத்தின் படங்கள் மற்றும் அதன் சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களை இவர்கள் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. தொலைபேசி இலக்கங்கள் ஊடக சீட்டிழுப்பக்கள் அல்லது பிரபல வர்த்தக நடவடிக்கை தொடர்பாக நிதி அன்பளிப்புக்கள் கிடைத்துள்ளதாக இம்மோசடிக்காரர்கள் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கின்றனர். இப்பரிசில்களை பெற்றுக்கொள்வதற்கு ஆரம்பகட்ட தொகையை வைப்பி;லிடுமாறு அவர்கள் அறிவிக்கின்றனர். இவ்வாறான மோசடிக்காரர்களிடம் சிக்காமல் மிக அவதானத்துடுன் செயற்படுமாறு மத்திய வங்கி பொதுமக்களை கேட்டுள்ளது. ஏதேனும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அறிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு மத்திய வங்கி பொதுமக்களை கேட்டுள்ளது.

shukrymjm
By shukrymjm நவம்பர் 15, 2018 08:18
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க