Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலகின் முன்னணி சுழல் நட்சத்திரம் கிரிக்கட் உலகுக்கு விடை கொடுத்தார்.

shukrymjm
By shukrymjm நவம்பர் 10, 2018 09:07

உலகின் முன்னணி சுழல் நட்சத்திரம் கிரிக்கட் உலகுக்கு விடை கொடுத்தார்.

உலகின் மிகச்சிறந்த இடது கை சுழல் வீச்சாளராக ரங்கனஹேரத் இன்று கிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்துடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 211 ஓட்டங்களால் தோல்வியடைந்த நிலையில் அவர் கிரிக்கட் உலகிலிருந்து ஓய்வு பெற்றார்.

இப் போட்டியில் முதலாது இனிங்சில் இங்கிலாந்து அணி 342 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி முதலாவது இனிங்சில் 203 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 139 ஓட்டஙகள் முன்னிலையுடன் தனது 2வது இனிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 6 விக்கட்களை இழந்து 322 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. இந்நிலையில் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 461 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலங்கை அணி சகல விக்கட்டுகளையம் இழந்து 250 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அஞ்சலோ மெத்திவ்ஸ் 2 இனிங்சிலும் அரைச்சதங்கள் பெற்றார். ஏனைய வீரர்கள் 2 இனிங்சிலும் அரைச்சதம் பெறவில்லை. ரங்கன ஹேரத் 2 இனிங்சிலும் தலா 3 விக்கட்டுக்களை வீழத்தினார். உலகின் மிகச்சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளராக கருதப்படும் ரங்கன ஹேரத் புதிய சாதனையுடன் விடை பெற்றார். காலி சர்வதேச மைதானத்தில் 100 விக்கட்டுக்களை வீழ்த்திய 2 வது பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் ஏற்படுத்தினார். இவர் தனது 40 வயதில் ஓய்வு பெற்றார்.

shukrymjm
By shukrymjm நவம்பர் 10, 2018 09:07
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க