Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யெமனில் இடம்பெற்று வரும் மோதல்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 9, 2018 16:29

யெமனில் இடம்பெற்று வரும் மோதல்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

யெமனில் இடம்பெற்று வரும் மோதல்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வடைந்துள்ளது. இதில் 47 ஹெளவ்தி பயங்கரவாதிகளும், 11 அரச ஆதரவு படையினரும் அடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 2014ம் ஆண்டு முதல் பயங்கரவாதிகள் வசமுள்ள ஹொதய்தா நகரை மீட்பதற்கென கடந்த ஒரு வாரகாலமாக சவூதி கூட்டுப்படைகளின் உதவியுடன், யெமன் அரச படை கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. வான்வழி மற்றும் தரை தாக்குதல்களும் நடத்தப்படுவதாக யெமன் செய்திகள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் மற்றும் கண்ணி வெடிகள் ஆகிய அச்சுறுத்தல்களினால் ஹொதய்தா நகரை கைப்பற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக யெமன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 9, 2018 16:29
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க