Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2018 14:42

பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

பலரிடம் 7 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை பெற்று மோசடி செய்து, மறைந்திருந்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ சட்ட அமுலாக்க பிரிவினர் அவரை கைதுசெய்துள்ளனர். சந்தேக நபர் தெஹிவளை பிரதேசத்தில் காணி கொள்வனவு மற்றும் விற்பனை நிறுவனமொன்றின் உரிமையாளரென தெரியவந்துள்ளது. சொகுசு வீடுகளை நிர்மாணித்து தருவதாக தெரிவித்து பத்திரிக்கைகளில் விளம்பரங்களை பிரசுரித்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ விசேட விசாரணை பிரிவில் 7 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மிரிஹான விசேட குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களம் ஆகியவற்றிலும் சந்தேக நபருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவரை இன்றைய தினம் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸ சட்ட அமுலாக்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 8, 2018 14:42
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க