அமைச்சர் திணேஷூம், இராஜாங்க அமைச்சர் பியசேனவும் கடமைகளை பொறுப்பேற்பு
Related Articles
புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்களில் ஒருவரான பியசேன கமகே மற்றும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சரான தினேஷ் குணவர்த்தன தமது கடமைகளை இன்று ஆரம்பித்தனர்.
இளைஞர் மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரான பியசேன கமகே பத்தரமுல்லை செத்சிறிபாயவிலுள்ள தமது அமைச்சில் சர்வ மத வழிபாடுகள் மத்தியில் கடமைகளை ஆரம்பித்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர். தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் மனுர பெரேராவிற்கு ஜனாதிபதியினால் இவ்வைபவத்தில் நியமனக்கடிதம் வழங்கப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் ஒன்றிணைய வேண்டுமென மக்கள் எதிர்பார்த்திருந்தனர். நாங்கள் எதிர்பார்க்காத சந்தர்ப்பத்தில் இவர்கள் இருவரும் இணைந்துகொண்டனர். இதனால் நாட்டு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஒன்றிணைந்ததன் காரணமாக நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் அந்த நம்பிக்கை நாட்டு மக்கள் அனைவருக்கும் உண்டு என இராஜாங்க அமைச்சர் பியசேன கமகே தெரிவித்தார்.
இதேவேளை மகா நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன பத்தரமுல்லை சுஹூருபாயவிலுள்ள தமது அமைச்சில் கடமைகளை ஆரம்பித்தார். சர்வமத தலைவர்களின் ஆசிர்வாதத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
எனக்கு வழங்கப்பட்ட அமைச்சின் மூலம் மக்களின் எதிர்பார்ப்புக்களை நான் நிறைவேற்றுவேன். மேல் மாகாணம் என்பது அபிவிருத்தியின் கேந்திர நிலையமாகும். இம்மாகாண அபிவிருத்திக்காக அனைவருடன் இணைந்து செயல்படுவேன். நம்பிக்கையுடன் கூடிய நிலையான நாடு மற்றும் அரசாங்கத்தை உருவாக்குவதற்காக உரிய ஆதரவை நானும் மக்களும் வழங்குவோம். மேல் மாகாணத்தின் அனைத்து உள்ளுராட்சி மன்ற தலைவர்களுடன் இணைந்து கலந்துரையாட நான் தீர்மானித்துள்ளேன். அதன் மூலம் அதிகாரிகளிடமிருந்து தட்டி பறிக்கப்பட்ட அதிகாரங்கள் மீண்டும் அவர்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment