Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அர்ஜூன ரணதுங்க சற்றுமுன் கைது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 29, 2018 16:51

அர்ஜூன ரணதுங்க சற்றுமுன் கைது

முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சற்றுமுன் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொடவில் உள்ள பெற்றோலிய கூட்டுதாபனத்தின் முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க நேற்று அத்துமீறி பிரவேசித்தமையினால் அங்கு அமைதியற்ற நிலை ஏற்பட்டது. இதன்போது அவரது பாதுகாப்பு அதிகாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டுதாபனத்தின் ஊழியர்கள் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடாது பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு வருகை தந்து அலுவலகத்திற்குள் அத்துமீறிய பிரவேசிக்க முயன்றார். அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை எடுத்துச்செல்வதற்காகவே அவர் வ்ருகை தந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் அலுவலகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்க பெற்றோலிய கூட்டுதாபனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் முயன்றனர். இதனால் அங்கு அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டதுடன், ஊழியர்கள் முன்னாள் அமைச்சருக்கு எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர். இதன்போது அர்ஜூன ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் படுகாயம் அடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னாள் அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோலிய கூட்டுதாபனத்தின் ஊழியரகள் எரிபொருள் விநியோகத்தினை தவிர்த்து வருகின்றனர். இதனால் நாடெங்கிலும் உள்ள எரிபொருள் நிலையங்களில் பெரும்பாலான வாகனங்கள் எரிபொருளை பெற்று கொள்வதற்காக காத்திருப்;பதை அவதானிக்க முடிந்தது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 29, 2018 16:51
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க