Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மாணவர்களின் சீனி பாவனையை குறைக்க புதிய வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2018 15:28

மாணவர்களின் சீனி பாவனையை குறைக்க புதிய வேலைத்திட்டம்

பாடசாலை மாணவர்களின் சீனி பாவனையை குறைக்க சுகாதார அமைச்சு புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. சீனியால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் தெளிவூட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக குறுந்திரைப்பட போட்டியொன்றை நடத்தவும் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. ‘கசக்கும் சீனி’ எனும் தொனிப்பொருளில் குறுந்திரைப்பட போட்டி நடத்தப்படும். இம்மாதம் 15ம் திகதி வரை இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கம் நாட்டு மக்களின் சுகாதார நலன் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. சீனி அடங்கிய உணவு மற்றும் குடிபானங்களில் சீனியின் அளவை குறிப்பிடுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களை நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பதே இதன் பிரதான நோக்கமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 10, 2018 15:28
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க