இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் போட்டி தொடர் , ஒரு டி-20 போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. ஒருநாள் தொடர் நாளை தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
தம்புள்ளையில் 2 போட்டிகளும் பல்லேகல மைதானத்தில் 2 போட்டிகளும் ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஒரு போட்டியும் இடம்பெறவுள்ளது.டி-20 போட்டி ஆர்.பிரேமதாச மைதானத்திலேயே இடம்பெறவுள்ளது.இலங்கை அணிக்கு தினேஷ் சந்திமாலும் இங்கிலாந்து அணிக்கு ஒயின் மோகனும் தலைமைத்துவம் வழங்குகின்றனர்.