Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடருகிறது

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2018 15:37

மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடருகிறது

தற்போது பெய்து வரும் மழையுடனான காலநிலை மேலும் தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மண் சரிவு அபாயம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. சீரற்ற காலநிலையினால் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளனர்.

 

நேற்றுமுன்தினம் ஆரம்பமான அடை மழையினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தற்போது குறைவடைந்துள்ளது. மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது. பதுளை,களுத்துறை, காலி, கேகாலை மாவட்டங்களில் மண் சரிவு அபாய அறிவிப்பு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இன்று மாலை வரை இந்த அறிவித்தல் அமுலில் இருக்கும். மண்சரிவு அபாய அறிகுறிகள் தென்பட்டால் அவதானமாக மக்கள் இருக்க வேண்டும். அவ்வாறான பகுதிகளிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும். இதுவரை 4 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. களுத்துறையில் 3 மரணங்களும் காலியில் ஒரு மரணமும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை அவதான நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் நாட்டின் பல்வேறு பகுதிகள் பெரும்மளவு பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஒரு சில பகுதிகளில் நேற்று நிலவிய அனர்த்த நிலை தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது. காலி மாவட்டத்தில் வெள்ளம் படிப்படியாக தணிந்து வருவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கிங் கங்கையின் தாழ் நில பகுதிகளான தொடங்கொட, வக்வெல்ல, ஜிந்தோட்டை, ஆகிய பகுதிகளில் ஜிங் கங்கையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. காலி மாவட்டத்தில் 131 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்துள்ளனர். எல்பிட்டியவில் குழந்தையொன்று நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் இக்குழந்தையை தேடும் பணிகள் இடம்பெறுகின்றன.

எல்பிட்டிய பிரதேச செயலக பிரிவில் 500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் எஸ்.கே.சிசிர குமார தெரிவித்துள்ளார்.

காலி ஹக்பீமன பகுதியில் மின்னல் தாக்கியதில் 15 வீடுகள் சேதமi;டந்துள்ளன. மின் இணைப்புகளும் மின்சார உபகரணங்களும் அதிகளவில் சேதமடைந்துள்ளதுடன் அவற்றின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை.

வட மாகாணத்திலும் கணிசமான அளவில் மழை பெய்து வருகின்றது. அங்கு தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ள போதும் பல மாதங்களாக வறட்சியுடன் கூடிய காலநிலை காணப்பட்டமையினால் இம்மழை தங்களுக்கு பெரும் நிவாரணம் என தெரிவித்துள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மூடப்பட்டிருந்த வெலிப்பன்ன பிரவேச பாதை தற்போது திறக்கப்பட்டுள்ளது. ஒரு சில பகுதிகளில் தொடர்ந்தும் வெள்ளம் காணப்படுகின்றது. வெள்ளம் ஏற்பட்டுள்ள போதிலும் அதனை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் அதில் நீராடி மகிழ்வதையும் அவதானிக்க கூடியதாகவுள்ளது. இதுவொரு ஆபத்தான நிலை என்பதை அறியாமல் இருப்பதால் உயிரிழப்புக்கள் ஏற்படும் வாய்ப்பிருப்பதாக இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2018 15:37
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க