Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வைத்தியசாலையகளில் மருந்து கையிருப்புத் தொடர்பான தகவல்கள் கணனிமயப்படுத்தும் வேலைத்திட்டம்

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2018 08:58

வைத்தியசாலையகளில் மருந்து கையிருப்புத் தொடர்பான தகவல்கள் கணனிமயப்படுத்தும் வேலைத்திட்டம்

வைத்தியசாலையகளில் மருந்து கையிருப்புத் தொடர்பான தகவல்கள் கணனிமயப்படுத்தும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித  சேனாரட்ன தெரிவிக்கையில் சகல மக்களுக்கும் சமமான அளவில் சுகாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று குறிப்பிட்டார்.
பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி மருந்தை விநியோகிப்பது இதன் நோக்கமாகும். மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டவுடன் உடனடியாக வைத்திய சேவைப் பிரிவுக்கு அறிவிப்பதுடன் ஏனைய வைத்தியசாலைகளில் இருந்து மருந்து வகைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் இதன் மூலம் வசதி கிட்டுகின்றது என்று அமைச்சர் தெரிவித்தார்.
மாகாண சபைகளில் உள்ள வைத்தியசாலைகளிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட இருப்பதாகவும் சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவத்துறை  அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.
ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 8, 2018 08:58
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க