சமுத்திர வளத்தின் மூலம் ஆகக் கூடிய பலன்களை பெற்று சுற்றுலா தொழில்துறை மேம்பாட்டுக்கும் நேர்வே நாட்டின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும். இலங்கையில் அபிவிருத்தி அடையாத பிரதேசங்களின் அபிவிருத்திக்காக நீண்டகாலமாக நேர்வே அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஒத்துழைப்பை பிரதமர் பாராட்டினார். இந்த ஒத்துழைப்பு தொடர்ந்தும் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
நோர்வே பிரதமர் அர்னா சோல்பேர்க்கும் Erna Solberg பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து ஒஸ்லோ நகரில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன. இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையில் வரலாற்றிலிருந்து நிலவி வரும் நல்லுறவு தற்பொழுது மேலும் வலுவடைந்துள்ளதாக நோர்வே பிரதமர் தெரிவித்தார். இலங்கை, நிலைபேறான அபிவிருத்தி இலக்கை நிறைவேற்றுவதற்கு நோர்வே அரசாங்கம் ஆகக் கூடிய ஒத்துழைப்பை வழங்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
நோர்வே அரசாங்கம் கொண்டுள்ள புதிய தயாரிப்புகள் தொடர்பான அறிவு மற்றும் தொழில்நுட்பத்தையும் இலங்கையுடன் பரிமாறிக் கொள்வதற்கு தயார் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment