சவூதி அரேபிய வரலாற்றில் முதற்தடவையாக வங்கி தலைவர் பதவிக்கு பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அல் ஒலாயன் சவூதி அரேபியன் வங்கி பிரதானியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபிய பெண்கள் அந்நாட்டு பொருளாதார செயற்பாடுகளுக்கு நேரடி ஒத்துழைப்புக்களை வழங்கும் வேலைத்திட்டங்கள் பல அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன. மட்டுப்படுத்தப்பட்டிருந்த பெண் சுதந்திரத்தை இல்லாது செய்து, பல்வேறு பொருளாதார செயற்பாடுகளுக்கு அவர்களது ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ளவுள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. சவூதி அரேபிய பெண்களுக்கு வாகனங்களை செலுத்துவதற்கும் அண்மையில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டமையும் விசேட அம்சமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.