Life+News The Official News Portal of Independent Television Network Ltd

எமது நாட்டில் 2500 வருடத்திற்கு மேற்பட்ட எழுத்து வரலாறு உண்டு-அமைச்சர் விஜயதாச

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 2, 2018 14:43

எமது நாட்டில் 2500 வருடத்திற்கு மேற்பட்ட எழுத்து வரலாறு உண்டு-அமைச்சர் விஜயதாச

எமது நாட்டில் 2500 வருடத்திற்கு மேற்பட்ட எழுத்து வரலாறு உண்டெனவும் உலகில் இவ்வாறான வரலாற்றை கொண்ட 7 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எமது நாடு சிறிய தீவுதான். ஆனாலும் கலாசார மரபுரிமைகள் அடிப்படையில் பார்க்கும் போது உலகின் பலம்வாய்ந்த நாடுகளை விட நாம் முன்னிடத்தில் இருக்கின்றோம். புராதன தொல்பொருட்களின் தரவுகள் கண்டறியப்பட்ட போது, இந்தியா எமக்கும் கீழே உள்ளது. வரலாற்றை எடுத்து நோக்கினால் எமது நாட்டில் தொடர்ச்சியாக எழுதப்பட்ட மகா வம்சம் போன்ற வரலாறும் இந்தியாவுக்கும் இல்லை. இவ்வாறு தொடர்ச்சியான எழுத்து வரலாறு மற்றும் 2 ஆயிரம்; வருடங்களுக்கு மேற்பட்ட எழுத்து வரலாற்றை கொண்ட நாடுகள் உலகில் ஏழே உள்ளன. அதற்குள் நாமும் அடங்குகின்றோம் என தெரிவித்தார்.

இலக்கிய மாதத்தை முன்னிட்டு மத்திய கலாசார நிதியத்தினால் வெளியிடப்பட்ட 34 நூல்களின் வெளியீட்டு வைபவத்தில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். பத்தரமுல்ல அபேகம வளாகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. உயர்கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி மற்றும் மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் பிரிஷாந்த குணவர்தன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 2, 2018 14:43
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க