Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக இடியுடன் கூடிய மழை

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 2, 2018 10:37

வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக இடியுடன் கூடிய மழை

நாட்டை சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டில், குறிப்பாக வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காணப்படும் மழையுடனான வானிலை நிலைமை மேலும் அதிகரிக்குமெனவும் அடுத்த சில நாட்களுக்கு தொடருமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ITN News Editor
By ITN News Editor அக்டோபர் 2, 2018 10:37
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க