Life+News The Official News Portal of Independent Television Network Ltd

யூத் வித் டெலன்ட் 2018-வெற்றிக்கிண்ணத்தை எடுத்துச் செல்லும் ஊக்குவிப்பு பவனி ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 26, 2018 13:33

யூத் வித் டெலன்ட் 2018-வெற்றிக்கிண்ணத்தை எடுத்துச் செல்லும் ஊக்குவிப்பு பவனி ஆரம்பம்

திறமைகளை பட்டைத்தீட்டும் ஐ.ரி.என் யூத் வித் டெலன்ட் ஜெனரேஷன் திரி ஊக்குவிப்பு பவணி பத்தரமுல்ல விக்ரமசிங்கபுரவிலுள்ள ஐரிஎன் வளாகத்தில் இன்று ஆரம்பமானது. 16 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் யூத் வித் டெலன்ட் 2018 ஆம் ஆண்டுக்கான வெற்றிக்கிண்ணத்தை எடுத்துச் செல்லும் ஊக்குவிப்பு பவனி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை இளைஞர் யுவதிகளின் திறமையை சர்வதேசத்திற்கு எடுத்துச் சென்ற இலங்கையின் முதல் தர ரியாலிட்டி நிகழ்ச்சியான யூத் வித் டெலன்ட் இல்கையின் முதல் தர நிகழ்ச்சி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இலங்கையின் ரியலிட்டி கலை ஒரு வரையறைக்குள் அடைப்பட்டுகிடந்தது. இசை மற்றும் பாடல்கள் மட்டுமே இவற்றில் இடம்பெற்றன. அதனை ஈடு செய்யும் வகையில் ஐரிஎன் இன் யூத் வித் டெலன்ட் ரியலிட்டி நிகழ்ச்சி மு:ன்னெடுக்கப்பட்டது. முதல் இரண்டு நிகழ்ச்சிகளும் பாரிய வெற்றியை பெற்றனபாடசாலை மாணவர்கள் மத்தியில் இந்நிகழ்ச்சி பெரும்ட வரவேற்பை பெற்றதுடன் ரைகம் விருது விழாவிலும் இந்நிகழ்ச்சி பெரும் பாராட்டை பெற்றது. இவ்வாறான பல்வேறு பெருமைகளுடன் தற்போது ஜெனரேஷன் திரி 3 வது அமர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி இன்றைய தினம் யூத்வித் டெலன்ட் வெற்றிக்கிண்ணத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் ஐரிஎன் ஊடக வலையமைப்பின் தலைவர் திருமதி திலகா ஜயசுந்தர, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் எரந்தவெலியங்கே, ஐரிஎன் இனின் பிரதம நிறைவேற்று அதிகாரி சந்தன திலகரத்ன ஆகிN:யார் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இக்கிண்ணம் ஐரிஎன் பிரதான நிறைவேற்று அதிகாரி சந்தன திலகரத்ன தேசிய இளைஞர் சேவை மன்றத்திடம் ஒப்படைத்hhர். அதனை தொடர்ந்து ஐரிஎன் இனின் தலைவி திலகா ஜயசுந்தரவினால் ஐரிஎன் ஊக்குவிப்பு மு:காமையாளர் சமந்த ரத்நாயக்கவிடம் ஒப்படைத்தார்.

இதுவரை யூத் வித் டெலன்ட் ஜெனரேஷன்’ திரி நிகழ்ச்சிக்காக பதிவு செய்யப்படாத இளைஞர்கள், யுவதிகள் இப்பவணியில் கலந்து கொண்டு தமது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

இதேவேளை ஐ:ரிஎன் எப்எம், வசந்தம் எப்எம் வானொலியின் ஏற்பாட்டில் இடம்பெறும் வாகன பவணி இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றது.மக்கள் வங்கியின் அனுசரணையுடன் ஐரிஎன் எப்எம் மற்றும் வசந்தம் எப்எம் இன் ஊருக்கு ஊர் வாகன பவணி நேற்று முல்லைத்தீவு நகரிலும் புதுக்குடியிருப்பிலும் இடம்பெற்றது. இதன் போது ஏராளமான மக்கள் இதில் கலந்து கொண்டு போட்டிகளில் பங்குபற்றினர். இவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 26, 2018 13:33
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க