Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை முன்னரைவிட குறைவடைந்துள்ளது : ஜனாதிபதி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 21, 2018 16:03

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை முன்னரைவிட குறைவடைந்துள்ளது : ஜனாதிபதி

தற்போது சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறுநீரக நோயாளர்களுக்கு ஆசிவேண்டிய அநுராதபுரம் ஜயசிறி மகா போதிக்கு அருகாமையில் இடம்பெற்ற ஆசிர்வாத நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் துரிதமாக பரவி வரும் சிறுநீரக நோயை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி படையணி ஸ்தாபிக்கப்பட்டது. சிறுநீரக நோயாளர்கள் செரிந்துள்ள பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களுக்கு சுத்தமான நீரை வழங்கும் நோக்கில் பக்றீரியா எதிர்ப்பு நீர் வடிக்கட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் 500வது பக்றீரியா எதிர்ப்பு நீர் வடிக்கட்டி அநுராதபுரம் மிஹிந்தலை குருந்தன்குளம் மிஹிந்து ஆசிரமத்தில் திறந்து வைக்கப்பட்டது. நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு ஜயசிறி மகா போதிக்கு அருகாமையில் இருந்து ஜனாதிபதியினால் இன்று திறந்து வைக்கப்பட்டது. இவ்வாறு பொருத்தப்பட்டுள்ள 500 பக்றீரியா எதிர்ப்பு நீர் வடிக்கட்டிகளிலும் இருந்தும் பெறப்பட்ட நீர் ஜயசிறி மகா போதிக்கு பிரித் பாராயணத்திற்கு மத்தியில் ஜனாதிபதியினால் பூஜிக்கப்பட்டது. 500வது பக்றீரியா எதிர்ப்பு நீர் வடிக்கட்டிக்கு புவி சரிதவியல் ஆய்வு பணியகம் நிதி உதவி வழங்கியதுடன், தொழில்நுட்ப நடவடிக்கைகளுக்கு என இலங்கை கடற்படை அனுசரணை வழங்கியிருந்தது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 21, 2018 16:03
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க