Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கு ஒத்தி வைப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 19, 2018 19:04

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கு ஒத்தி வைப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கு எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்றைய தினம் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இறுதியாக வாய்மூல சமர்ப்பனங்களுக்காக வழக்கு இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டது. ததேகூ பா.உ ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்ச்சியாக விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிரான வழக்கு விசாரணை மட்டு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம். இசதீன் தலைமையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இறுதி கட்ட சாட்சிகளாக இன்று மேல் நீதிமன்ற பதிவாளர் மற்றும் மட்டு சிறைச்சாலை ஆணையாளர் ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 2ஆம் சந்தேகநபரான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணாநந்த ராஜா அனுப்பிய கடிதம் தொடர்பில் இன்று விசாரணைகள் இடம்பெற்றன. கடந்த வருடம் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கின் சாட்சியங்கள் நிறைவடைந்துளள்ள நிலையில் எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி வாய்மூல சாட்சியங்கள் இடம்பெறவுள்ளன. ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பிரதீப் மாஸ்டர், கஜன் மாமா எனபடும் கனகநாயகம், இராணுவ புலனாய்வு உத்தியோக்கத்தர் என்.கலீல், மு;னனாள் இராணுவ வீரர் மதுசிங்க ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதியன்று மட்டு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 19, 2018 19:04
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க