Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நியோமல்,எமில் ஆகியோர் விளக்கமறியலில்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2018 17:23

நியோமல்,எமில்  ஆகியோர் விளக்கமறியலில்

வெலிக்கட சிறைச்சாலையின் 27 கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் போதை பொருள் ஒழிப்பு பணியகத்தின் பொலிஸ் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் அத்தியட்சகர் எமில் ரஞ்சன் ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட் பிரியாந்த லியனகே உத்தரவிட்டார். சந்தேக நபர்கள் தாக்கல் செய்த பிணை கோரி தாக்கல் செய்த மறுசீரமைப்பு மனு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இதற்குமுன்னர் நிராகரிக்கப்பட்டது. சம்பவம் குறித்த விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட 25 ரி.56 ரக துப்பாக்கிகள் குறித்த தகவல்கள் பெறப்படவுள்ளன. இதற்கென இவை அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறித்த அறிக்கை இதுவரை கிடைக்கவில்லையென குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2018 17:23
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க