Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முதலாவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியின் 112ஆவது ஜனன தினம் இன்று

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2018 15:38

முதலாவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியின் 112ஆவது ஜனன தினம் இன்று

இலங்கையின் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாக காலஞ்சென்ற ஜே.ஆர்.ஜயவர்தனவின் 112 வது ஜனன தினம் இன்றாகும்.

 

1906 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் திகதி பிறந்த ஜூனியர்ஸ் ரிச்சட் ஜயவர்தன அல்லது ஜே.ஆர். ஜெயவர்தன தனது 36 வது வயதில் களனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். அவர் தனது அரசியல் வாழ்க்கையில் 15 வருடங்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பதவி வகித்தார். குறிப்பாக நிதியமைச்சர் மற்றும் விவசாய அமைச்சராக அவர் நாட்டுக்கு ஆற்றிய சேவைகள் இன்றும் மக்களால் பாராட்டப்படுகின்றது. 1977 ஆம் ஆண்டு முதல் 10 வருடங்கள் அரச தலைவராக செயல்பட்டார். 1970 ஆம் ஆண்டு முதல் 77 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 7 வருடங்கள் எதிர்கட்சி தலைவராக பதவி வகித்தார். 1956 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரையிலான குறுகிய 4 வருடங்கள் மாத்திரமே அவர் தோல்வியைசந்தித்தார். 1978 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கையில் முதலாவது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்ற ஜே.ஆர்.ஜெயவர்தன இலங்கையின் கதவுகளை சர்வதேசத்திற்கு திறந்துவிட்ட அரச தலைவர் என்பதை எதிர்கட்சிகளும் ஆளுங்கட்சிகளும் கருத்து பேதமின்றி ஏற்றுக் கொள்ளும் உண்மையாகும்.ஃ வெற்றிகரதாக கொழும்பு திட்டம், துரித மகாவெலி அபிவிருத்தி திட்டம், திறந்த பொருளாதார கொள்கை திட்டங்களை அறிமுகப்படுத்தி இலங்கையின் அபிவிருத்தி பாதையில் ஒரு திருப்புமுணையை ஏற்படுத்தினார். குறைவாக பேசி அதிகமாக கருத்துக்களை உள்வாங்கி வெற்றிகரமாக அபிவிருத்தி பாதைக்கு நாட்டை கொண்டு சென்றதில் வெற்றி பெற்ற அரசியல்வாதியாக ஜே.ஆர்.ஜெயவர்தன வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். போராட்டங்களில் வெற்றி பெறுவதற்காக சத்தியாகிரகத்தை தமது வாழ்க்கையாக ஏற்றுக் கொண்ட ஜே.ஆர்.ஜெயவர்தன இலங்கையை ஆட்சி செய்த ஆசியாவின் புத்திசாளி எனும் கௌரவத்திற்கு பாத்திரமானவர். ஐக்கிய தேசிய கட்சி அடைந்த வரலாற்று தோல்விகளிலிருந்து ஜே;.ஆர்.ஜெயவர்தன கட்சியை வெற்றி பாதையில் கொண்டு சென்றார். இது தற்போதைய இளம் அரசியல்வாதிகளுக்கு சிறந்த முன்உதாரணமாகும்.

கலாஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் நினைவு தினநிகழ்வு ; பிட்டகோட்டையிலுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் ஜாதிக சேவக சங்கமவின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்றது. கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அகில விராஜ் காரியவசம், ஜயவர்தனவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்;. ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2018 15:38
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க