Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தென்மேற்கு பகுதியில் இன்றிலிருந்து சிறிதளவு மாற்றம் ஏற்படும்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2018 09:48

தென்மேற்கு பகுதியில் இன்றிலிருந்து சிறிதளவு மாற்றம் ஏற்படும்

தற்போது காணப்படும் வானிலையில், நாட்டின் தென்மேற்கு பகுதியில் இன்றிலிருந்து சிறிதளவு மாற்றம் ஏற்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.வடமேல் மாகாணத்தில் சில தடவைகள் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

 

நாடு முழுவதும், குறிப்பாக ஹம்பாந்தோட்டை, மொனராகலை, மாத்தளை, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

 

நாட்டின் தென் கடற்பரப்புகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

 

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் இக் கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

 

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2018 09:48
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க