Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஆசிய நாடுகளின் அபிவிருத்தி திட்டங்களுக்கென தனியார் முதலீடுகள் குறித்து, கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 12, 2018 12:55

ஆசிய நாடுகளின் அபிவிருத்தி திட்டங்களுக்கென தனியார் முதலீடுகள் குறித்து, கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

ஆசிய நாடுகளின் அபிவிருத்தி திட்டங்களுக்கென தனியார் முதலீடுகள் குறித்து, கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வியட்நாமின் ஹெனோய் நகரில் நடைபெறுகின்ற ஆசியான் உலக பொருளாதார மாநாட்டின் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

உலக பொருளாதார மாநாடு நேற்று நடைபெற்றது. தனியார் துறையின் செல்வத்தை ஒன்று திரட்டல் எனும் தொனிப்பொருளில் இது இடம்பெற்றது. அரச மற்றும் தனியார் துறையினரின் கூட்டு திட்டங்களுக்கென தனியார் துறையை பலப்படுத்துவதற்கான புதிய கட்டளைகள் பலவற்றை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் அங்கு குறிப்பிட்டார். அமர்வின் ஆரம்ப உரை நிகழ்த்திய உலக பொருளாதார மாநாட்டு முகாமைத்துவ குழுவின் தலைவர் போர்க் பிரன்டே கருத்து தெரிவிக்கையில் அடுத்த 15 ஆண்டுகளுக்குள் ஆசியாவின் அபிவிருத்திக்கு அரச துறையின் ஒதுக்கீடுகள் போதுமானவைகள் அல்ல என குறிப்பிட்டார். தனியார் துறையினரின் பங்களிப்பை அதிகரித்துக் கொள்வதற்கான திட்டங்கள் துரிதமாக வகுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். தனியார் நிதியை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் போது, முகம் கொடுக்க வேண்டிஏற்படுகின்ற சவால்கள் குறித்தும் இதன் போது, கலந்துரையாடப்பட்டன.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 12, 2018 12:55
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க