ஆசிய உலக பொருளாதார மாநாடு வியட்நாமின் ஹெனோய் நகரில் இன்று ஆரம்பமாகிறது. இதில் கலந்துகொள்ள சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அந்நாட்டில் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது. ஆசியான் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் மற்றும் ஏனைய ஆசிய நாடுகளின் உயர்மட்ட தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.