கைகள் கட்டப்பட்ட நிலையில் கந்தகெட்டிய மொரஹேல மீகொல்ல பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
கந்தகெட்டிய பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 24 ஆம் திகதி முதல் காணாமற்போன 31 வயதுடைய கெட்டவத்த, மீகஹாகியூல பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கந்தகெட்டிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.