சீனாவில் 228 மில்லியன் வருடங்கள் பழைமைவாய்ந்த ஆமை படிமங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. குறித்த காலப்பகுதியில் ஆமைகளுக்கு முதுகெலும்பு இல்லையென்பதற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக படிமங்களை ஆய்வுசெய்த ஸ்கொட்லேண்ட தேசிய ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் கிடைக்கப்பெற்ற ஆமைகளின் படிமங்களின் ஆய்வறிக்கையின்படி முந்தைய யுகத்தில் வாழ்ந்த ஆமைகளுக்கு முதுகெலும்பு காணப்பட்டது. தற்போது கண்டுப்பிடிக்கப்பட்ட ஆமைகளின் படிமங்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் முதுகெலும்பு எவ்வாறு உருவானது என்பது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமென ஸ்கொட்லேண்ட தேசிய ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.