அஜித்தின் `விஸ்வாசம்’ படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சமீபத்தில் தகவல் வெளியானது. சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன் இணையத்தில் வைரலாகி வருகிறது.