ஹவாய் தீவை சூறாவளி தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமெரிக்க தீவுகளையும் லேன் சூறாவளி தாக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக அந்நாட்டு தேசிய வானிலை சேவை நிலையம் தெரிவித்துள்ளது.
சூறாவளியை அடுத்து பலத்த காற்று மற்றும் அதிக மழைவீழ்ச்சி ஏற்படுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் ஹவாய் தீவு உட்பட சூறாவளி தாக்கும் அபாயமுள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், சூறாவளியினால் மோசமான பாதிப்பை எதிர்நோக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு இடங்களுக்கு செல்லுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.