நியூசிலாந்து நாட்டில் இணை போக்குவரத்துத்துறை அமைச்சர் தனது பிரசவத்துக்கு மிதி வண்டியில் சென்றுள்ளமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நியூசிலாந்து நாட்டில் இணை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருப்பவர் ஜூலி அன்னே ஜென்டர். இவர், முதல் குழந்தையை பெற்றெடுப்பதற்காக, பிரசவத்திற்கான திகதி வந்தவுடன் மருத்துவமனையில் சேர்வதற்காக தனது வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்றுள்ளார். தான் மருத்துவமனைக்கு செல்கிறேன் என ஒரு செல்பி எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.