பிக் பாஸ் ஷோவில் தங்கள் திறமையினால் பலரது மனதை கவர்ந்த ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன் இணைந்து நடித்திருக்கும் படம் `பியார் பிரேமா காதல்’. புதுமுக இயக்குநர் இளன் இயக்கியிருக்கும் இத் திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 10-ஆம் திகதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. நல்லவைக்காக காத்திருக்க முடியாது என்று கூறியுள்ள படக்குழு படம் ஒருநாள் முன்னதாக ஆகஸ்ட் 9-ஆம் திகதி ரிலீசாக இருப்பதாக அறிவித்துள்ளது.