தாய்லாந்து குகையில் சிக்கியிருந்த மாணவர்கள் மீட்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 6 திரைப்படங்களை தயாரிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 5 வெளிநாட்டு திரைப்பட நிறுவனங்கள் இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தாய்லாந்து கலாசார அமைச்சு தெரிவித்துள்ளது. தாய்லாந்து தயாரிப்பு நிறுவனமொன்றும் திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது. டிஸ்கவரி தொலைக்காட்சி தேடுதல் தொடர்பில் நான்கு மணித்தியால நிகழ்ச்சியொன்றை தயாரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.