அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் பிரிட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இவர் தனது விஜயத்தின் போது, எலிசெபத் மகாராணியை சந்திக்கவுள்ளார். டிரம்ப்பின் பிரிட்டன் விஜயத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக விசேட அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு செல்லவுள்ளது. எதிர்வரும் 13 ஆம் திகதி டொனால்ட் டிரம்ப் இங்கிலாந்துக்கான விஜயத்தை ஆரம்பிப்பார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.