சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையில் நடைபெற்ற 2 வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் கடந்த வியாழன் ஆரம்பமான 2 வது டெஸ்ட் போடடியே சமனிலையில் முடிவடைந்தது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 253 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணிகள் 300 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 2 வது இன்னிங்ஸில் இலங்கை அணி 342 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. போட்டியின் இறுதி நாளில் போட்டியை நிறுத்தும் தருணத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியினால் 5 விக்கட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. 2 வது டெஸ்ட் தொடர் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்த போதிலும முதலாவது 2 வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியே வெற்றி பெற்றது.