உலகில் துப்பாக்கி பாவனையாளர்களில் நூற்றுக்கு 40 வீதமானோர் அமெரிக்க பிரஜைகளென ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்த நிறுவனமொன்று ஆய்வை மேற்கொண்டது. 133 நாடுகளின் தரவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதற்கமைய சர்வதேச மட்டத்தில் 857 மில்லியன் மக்கள் துப்பாக்கியை பயன்படுத்துகின்றனர். இதில் 393 மில்லியன் பேர் அமெரிக்க பிரஜைகளென தெரியவந்துள்ளது. பல நாடுகளில் துப்பாக்கியை பயன்படுத்துவதில் அதிக வரையறைகள் காணப்படுவதாகவும், ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.