நடிகை அனுஷ்கா சர்மா சமூக நல விடயங்களில் ஆர்வம் கொண்டவர். இதற்காக குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தெருவில் குப்பை போடுவதை கண்டித்து அனுஷ்கா சர்மா ஒருவரை திட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மையில் அவர் சாலையில் தன் காரின் சென்று கொண்டிருந்த போது அவ்வழியே காரில் வந்த மற்றொரு இளைஞர் பிளாஸ்டிக் கழிவுகளை சாலையில் எறிந்துள்ளார். இதனை பார்த்த அனுஷ்கா அவரை உடனே கண்டித்ததோடு நாட்டை நாம் தான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/TT25F_mSuCI”]