Life+News The Official News Portal of Independent Television Network Ltd

21 பீபா உலகக்கிண்ண கால்பந்து-இன்று ஆரம்பம்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 14, 2018 09:34

21 பீபா உலகக்கிண்ண கால்பந்து-இன்று ஆரம்பம்.

21 வது பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள், இன்று ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளன. நாளை ஆரம்பமாகும் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ஜூலை 15ம் திகதி வரை நடைபெறும் 2014ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் சம்பியனான ஜேர்மன் உள்ளிட்ட 20 நாடுகள் இப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. போட்டியை நடாத்தும் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. ஜேர்மனி பிரான்ஸ், பிரேஸில் இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. ஆர்ஜன்டினா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற நாடுகளுக்கும் வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. இவ்வுலக கிண்ண போட்டிகளில் கலநற்து கொள்ளும் 32 அணிகளும் தலா 4 அணிகளாக 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் முறையில் பிரிவுகளில் உள்ள அணிகள் போட்டிகளி; இடம்பெறும். ஒவ்வொரு பிரிவிலும் முதலிரு இடங்களை பிடிக்கும் அணிகள், நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். காலிறுதிக்கு முந்திய சுற்று, காலிறுதி சுற்று, அரையிறுதி ஆகியன நொக் அவுட் முறையில் இடம்பெறும்.

ஏ பிரிவில் ரஷ்யா, சவூதி அரேபியா, எகிப்து, உருகுவே அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் உருகுவே 1930 மற்றும் 1950ம் ஆண்டுகளில் உலகக் கிண்ண சம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

பி பிரிவில் போர்த்துக்கல், ஸ்பெயின், மொரோக்கோ, ஈரான் அணிகள் இடம்பெற்றுள்ளன. ஸ்பெயின் 2010ம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

சி பிரிவில் பிரான்ஸ், அவுஸ்திரேலியா, பெரு, டென்மார்க் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பிரான்ஸ் 1998இல் உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அணியாகும்.

டி பிhவில் ஆர்ஜன்டினா, ஐஸ்லாந்து, குறேசியா, நைஜீரியா அணிகள் இடம்பெற்றுள்ளதுடன், ஆர்ஜன்டினா 1978, 1987ம் ஆண்டுகளில் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

ஈ பிரிவில் பிரேஸில், சுவிட்சர்லாந்தில், கொஸ்டாரிகா, சேர்பியா அணிகள் இடம்பெற்றுள்ளதுடன், இதில் பிரேஸில் அணி, 5 முறை உலகக் கிண்ண்ததை வென்றுள்ளமை, குறிப்பிடத்தக்கதாகும்.

எப் பிரிவில் ஜேர்மனி மெக்சிகோ சுவீடன் தென்கொரியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளதுடன், நடப்பு சம்பியனான ஜேர்மனி ஏற்கனவே 4 முறை உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அணியாகும்.

ஜீ பிரிவில் பெல்ஜியம், பனாமா, டியூனிசியா, இங்கிலாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. இங்கிலாந்து 1966 இல் உலகக் கிண்ணத்தை வென்ற அணியாகும்.

எச் பிரிவில் போலாந்து, செனகல், கொலம்பியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளமை, குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 14, 2018 09:34
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க