பங்களாதேஷில் நிலவிவருகின்ற கடும் மழையுடன் கூடிய காலநிலையால் மண்சரிவில் சிக்குண்டு 14 பேர் பலியாகியுள்ளனர். மியன்மார் எல்லையிலுள்ள காக்ஸ்பஜார், ரங்கமாதி ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. மேலும் பலத்த மழை காரணமாக இஸ்லாம்பூர், புரிகாட், அம்டோலி, ஹத்திமாரா, சாரைபாரா ஆகிய பகுதிகளில் பாரிய நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
மழை வெள்ளம் மற்றும் மண்சரிவினால் இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கும் சேதமேற்பட்டுள்ளது. குறித்த அனர்த்தத்தை தொடர்ந்து பங்களாதேஷில் வாழ்கின்ற ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்யா அகதிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகள் இடம்பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment