நவம்பர் மாதம் இந்தியாவின் தலைநகர் டில்லியில் ஏற்படும் குறைந்த வெப்பநிலை 17 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று காலை காணப்பட்டது.
டில்லியின் வெப்பநிலை 6.3 செல்சியஸாக இன்று காலை காணப்பட்டது. டில்லியில் நேற்று நண்பகல் வெப்பநிலை 24.2 பாகை செல்சியசாக காணப்பட்டதுடன் இம்மாத்தில் பகல் காலத்தில் பதிவான குறைந்த வெப்பநிலை இதுவென இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
குளிர்காலம் ஆரம்பமாவதற்கு முன்னர் வெப்பநிலை இந்தளவு வீழ்ச்சியடைவதற்கான காரணத்தை குறிப்பிட முடியாதென திணைக்களம் அறிவித்துள்ளது. டில்லியின் குறைந்த வெப்பநிலை 1938 ம் ஆண்டு நவம்பர் 28 ம் திகதி காணப்பட்டது. அப்போது 3.9 பாகை செல்சியசாக அங்கு வெப்பநிலை பதிவாகியது.