பொலிவூட், கோலிவுட் என கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை ஸ்ரீ தேவி. அவரின் பிரிவை இன்னும் திரையுலகத்தினர் மட்டுமன்றி அவரது ரசிகர்களினாலும் ஏற்றுக்கொள்ள முடியாது உள்ளது. இந்நிலையில் தேவி மூத்த மகள் ஜான்வி கபூர் நடிப்பில் விரைவில் தடக் படம் வரவுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் கூட சமீபத்தில் வெளியாகி இணையத்தளத்தில் வலம் வருகின்றது.
இந்நிலையில் பத்மாவத் திரைப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி தான் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார். சஞ்சய் லீலா பன்சாலி பொலிவூட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது எனவே ஸ்ரீ தேவி மகளுக்கு மிகப்பெரும் அதிர்ஷ்டமாக இது அமையலாம்.