உலக வர்த்தக அமைப்பிலிருந்து வெளியேறப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். உலக நாடுகளிடையே வர்த்தக சட்டங்களை வகுக்கவும், வர்த்தக பிரச்சினைகளை தீர்க்கவும், கடந்த 1995ம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பு உருவாக்கப்பட்டது. குறித்த அமைப்பு அமெரிக்க நலன்களுக்கு எதிராக செயற்படுவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். அவர்கள் தமது நடவடிக்கையை மாற்றிக்கொள்ளாதவிடத்து, அதன் அங்கத்துவத்திலிருந்து வெளியேறப்போவதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதேவேளை உலக வர்த்தக அமைப்பு , அமெரிக்க இறையாண்மையில் தலையிடுவதாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதியான ரொபர்ட் லைக்தீசரும் குற்றம் சுமத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.