கடல் பாதுகாப்பு தொடர்பில் சீனா மற்றும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசேட வேலைத்திட்டமொன்றை துரித கதியில் அறிமுகப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சீன வெளிவிவகார அமைச்சர் இந்தியா செல்லவுள்ளார். அவரது விஜயத்தின்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட எதிர்ப்பார்த்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இதேவேளை சீனா மற்றும் இந்தியாவுக்கிடையிலான உறவுகளை பலப்படுத்தும் வகையிலான மேலும் பல விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்படுமென இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.